
பளை பொலீஸ் பிரிவிற்க்கு உட்பட்ட கிளாலி பகுதியில் நேற்று முன் தினம் (05) இரவு 37.700கிராம் கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடற்படைக்கு கிடைத்ய இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது இடம் பெற்றுள்ளது.
குறித்த சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் பளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பொலீசாரால் குறித்த சந்தேக நபர்களையும் கஞ்சா பொதிகளையும் நீதிமன்ற நடவடிக்கைக்கு முற்படுத்த நடவடிக்ககள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றனர்.