மயக்க மருந்து கொடுத்து அவர் மயங்கிய பின் மோதிரத்தை ஆட்டையப் போட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (06.09.2022) வடமராட்சியில்மந்திகை பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணியளவில் வல்லிபுர கோவில் செல்வதற்கென கூறி வாடகை முச்சக்கரவண்டி ஒன்றில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வந்ததும் முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு கூறி மருதுவமனைக்குள் மருந்து எடுப்பது போன்று பாசாங்கு செய்து அங்கிருந்து மூன்று மென்பான போத்தல்களை கொண்டுவந்து குறித்த முச்சக்கர வண்டி சாரதியை குறித்த மென்பானத்தை அருந்துமாறு கொடுத்துள்ள நிலையில் அவர் அதனை பருகிய சில நிமிடங்களில் பருத்தித்துறை செல்வதற்காக முச்சக்கர வண்டியை செலுத்துமாறு கூறியுள்ளனர்.
அவர் பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்தபோது
மந்திகை சிலையடி பகுதியில் முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளனர். அவ்வாறே அவர் முச்சக்கர வண்டியை நிறுத்தியுள்ளார். வீதியோரத்தில் குறித்த வாடகை முச்சக்கர வண்டியின் உரிமையாளர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் இரவுக் கடமைக்காக சென்று கொண்டிருந்த பருத்தித்துறை போலீசாரும் ராணுவத்தினரும் குறித்த முச்சக்கர வண்டி சாரதி அழைத்துள்ளனர். இந்நிலையில் அவர் எழுந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்து முச்சக்கர வண்டியை இயக்கிக் கொண்டு நெல்லியடி நோக்கி சென்று கொண்டிருந்த வேளை நெல்லியடி நகருக்கு அண்மித்த பகுதியில் மேலும் அவரால் முச்சக்கர வண்டியை செலுத்த முடியாமல் தூக்கம் அடைந்திருக்கும் நிலையில் அங்கு கடமைக்காக இருந்த வாடகை முச்சக்கரவண்டி நண்பர்கள் அவரை உடனடியாக அழைத்து வந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
அவசர சிகிச்சை சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் பருத்தித்துறை, நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.