
ராமேஸ்வரம் செப் 08,
ஈழத்தமிழர்கள் 15 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி சென்று இறங்கி தனுஷ்கோடி புதிய பாலம் அருகே நிற்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம. நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி குறித்த தகவலை கூறியுள்ளார்.




இதனால் உசாரடைந்த இந்திய மத்திய, மாநில உளவுத்துறை தனுஷ்கோடி கடற்கரை பகுதிகள் எங்கும் தீவிர சேதனை நடத்தியுள்ளனர். ஆனால் அவ்வாறு எவரும் இல்லாத நிலையில்
சந்தோகம் கொண்ட உளவுத்துறைகள் தொலைபேசி அழைப்பு வந்த எண்ணுக்கு அழைப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் குறித்த எண் அணைக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் இது ஒரு அநாமதேய அழைப்பு என்பதை அறிந்து கொண்ட உளவுத்துறை இரவிரவாக ஈழத்தமிழர்களை தேடும் பணியினை நிறுத்தி அழைப்பு ஏற்படுத்தி உளவுத்துறைகளை உசார் படுத்திய நபரது தொலைபேசி எண்ணை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்றுள்ள நிலையில் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக தமிழகத்திற்கு செல்லும் ஈழத்தமிழர்களை கண்காணிக்கவும், அவர்களை அழைத்து வரும் படகோடிக்களை சுற்றி வளைத்து கைது செய்யவும், மத்திய, மாநில உளவுத்துறை, இந்திய கடற்படை, கடலோர காவல் படை மற்றும் மரைன் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை தனுஸ்கோடி பொலீசாருக்கும் குறித்த மர்ம நபர் தொலைபேசியில் குறித்த தகவலை வழங்கியுள்ளார். இதனால் பொலீசாரும் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது மர்ம நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.