சவூதி அரேபியாவில் இருந்து எரிபொருளை பெறுவதற்காக 5 வருட கடனாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு கோரி சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.
சிறிலங்கா அதிபரின் சவூதி அரேபியாவிற்கான தூதுவர் என்ற வகையில் நசீர் அஹமட் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் சவுதி அரேபியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக ஏரிபொருளைப் பெறுவதற்காக 5 வருட கடனாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு கோரி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார்.
நசீர் அஹமட் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை சவுதி அரேபியாவில் தங்கியிருந்தார்.
இதன் பின்னர் நாடு திரும்பிய அமைச்சர் திங்கட்கிழமை அதிபர் மற்றும் அமைச்சரவைக்கு இதுதொடர்பாக விளக்கம் அளித்ததாகவும் தெரியவந்துள்ளது.