
பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தம்மிக்க பெரேராவுக்கு வழங்குவதற்காக பசில் ராஜபக்ஷ ஒரு பில்லியன் ரூபாவை வாங்கியதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பணத்திற்கு விற்றதாக கூறும் மேர்வின் சில்வா, இது தொடர்பான ஒப்பந்தத்தை தொடர்பு கொண்டவர் பசில் ராஜபக்ஷ என்றும் குறிப்பிடுகிறார்.
இணைய ஊடக கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.