
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது இரங்கலை செய்தியினை அனுப்பியுள்ளார்.
மன்னர் சார்லஸுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் அவர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
ராணி தனது குடிமக்களின் அன்பையும் மரியாதையையும், உலக அரங்கில் அதிகாரத்தையும் சரியாக அனுபவித்தார் என்று புடின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடினமான, ஈடுசெய்ய முடியாத இழப்பை எதிர்கொள்ளும் தைரியத்தையும், நெகிழ்ச்சியையும் நான் விரும்புகிறேன்.
அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானிய மக்களுக்கும் உண்மையான இரங்கலையும் ஆதரவையும் தெரிவிக்க உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
2003ம் ஆண்டு பிரித்தானியாவிற்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணத்தின் போது, பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத் புடினுக்கு விருந்தளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.