அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த விடயத்தை சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார்.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி, வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி மற்றும் அரிசி மாவு ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த இருவாரங்களுக்கு முன்னர் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் லங்கா சதொசவில் குறைக்கப்பட்டிருந்தன.
அதன்படி சீனி, அரிசி, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளைப்பூடு உள்ளிட்ட பொருட்களின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.