
யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் 1998 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர அணியினரினால் இன்றைய தினம் இரண்டு இலட்சம் பனை விதைகள் நடும் திட்டம் வல்லிபுரம் பகுதியில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.



புலம் பெயர் மற்றும் உள்ளூர் பழைய மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் விருந்தினர்களாக வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி, பனை அபிவிருத்திச் சபை பொது முகாமையாளர் திரு லோகநாதன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை முகாமையாளர் பொறியியலாளர் ஜெகதீசன், ஆகியோர் கலந்து கொண்டு பனம் விதைகளை நடுகை செய்து தொடக்கி வைத்தனர்.
காலை 8 மணி முதல் ஆரம்பமான குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்றது. குறித்த இரண்டு இலட்சம் பனம் விதைகள் நடுகை தி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையும் இடம்பெறவுள்ளது