மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அஹின்சக்க மாமா என்றழைக்கப்படும் நபர், கொழும்பு கோட்டை பகுதியில், மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் புகைப்படம் தாங்கிய கண்ணீர் அஞ்சலி பதாகையை வைத்துள்ளதுடன் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றார்.
தான் மகாராணி இரண்டாம் எலிசபெத் அதேபோன்று அவரது குடும்பத்தாருடன் 35 வருடங்களாக தொடர்பை பேணி வருவதாகவும் இந்நிலையில், மகாரணிக்கு தான் கடிதங்களையும் அனுப்பியுள்ளதாகவும் அதேபோன்று மகாராணியின் குடும்பத்தாரும் தனக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மகாரணி குடும்பத்தார் இலங்கைக்கு வந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போன்றவற்றையும் அவர் அஞ்சலி செலுத்துவதற்காக வரும் நபர்களுக்கு காண்பித்து வருகின்றார்.
இதன்போது கருத்துரைத்த அந்நபர்,
இதன்போது கருத்துரைத்த குறித்த நபர், 35 வருடங்களாக நான் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்பத்தாருடன் தொடர்பை பேணி வருகின்றேன்.
மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு ஈடுசெய்ய முடியாதது. அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது இறுதியாசை. மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தலைமையில் செல்லும் குழுவினருடன் என்னையும் அழைத்து செல்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும் என்பது எனது இறுதியாசை என்பதை இலங்கையின் அரச நிர்வாகிகளுக்கும் இராஜாதந்திரகளுக்கும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.