சர்வதேச அபிவிருத்திக்கான அமொிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பிலும் அமெரிக்காவின் பங்களிப்புத் தொடர்பிலும்
அவருடைய பயணத்தின் போது ஆராயப்படும் என்று அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமந்தா பவரின் பயணத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட உயர்மட்ட அரசியல் பிரமுகர்களையும் அவர் சந்திப்பார் என்றும் தெரியவந்துள்ளது.