தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் உலக சந்தையில் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
ஐரோப்பிய மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில் தங்க விலை உயர்வினை சந்தித்துள்ளது.
அமெரிக்க டொலரின் மதிப்பானது 20 ஆண்டுகால உச்சமான 110.78ல் இருந்து 108.945 ஆக சரிவினைக் கண்டுள்ளமையானது தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது.
இதற்கமைய, தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1680 – 1755 டொலர்களுக்குள் இருக்கலாம் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
தங்கம் விலையானது அவ்வப்போது குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும்,சர்வதேச சந்தையில் விலை குறையும்போது வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
சர்வதேச அளவில் நிலவி வரும் காரணிகளுக்கு மத்தியில், பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியில் காணப்படுவதுடன்,வட்டி அதிகரிப்பால் பொருளாதாரம் மந்த நிலையை எட்டலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வட்டி விகிதம் அதிகரித்தாலும், நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலை சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது.