எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையை மீண்டும் உயர்த்த நேரிடும் என அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சாரம், நீர்க்கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அந்த சங்கம் கூறியுள்ளது.
இதேவேளை, முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது தொடர்பாக நாளை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
எனினும், அரசு தலையிட்டால், கோழி மற்றும் முட்டை விலையை குறைக்க முடியும், எனவும் அவர் கூறினார்.