
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் போராட்டத்தின் 44 நாளாவது நாள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் எனக் கோரிய குறித்த போராட்டம் மன்னர் மாவட்டத்தில் ஆரம்பமாகி இன்று 44 ஆவது நாளான கிளிநொச்சி கோரக்கன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்றது.




வடக்கு கிழக்கு மக்களுக்கு கவுரவமான தீர்வு வேண்டும் என வலியுறுத்தி குறைத்து அமைதி போராட்டம் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினர் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் கலைப்பகுதியில் உள்ள மக்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் தொடர்ந்து அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.