
பதிவுத் திருமணங்களை வீடுகளில் மிக மிக குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் வீட்டில் நடாத்துவதற்கு அனுமதிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியிருக்கின்றார்.
இதன்படி திருமண வைபங்கள் வீட்டிலோ மண்டபங்களிலோ நடாத்த மிக கடுமையான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பதிவு திருமணத்தை தம்பதிகளின் பெற்றோர், இரு சாட்சிகள், மற்றும் பதிவாளருடன் மட்டும்
வீட்டில் நடாத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.