
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் தொடர்பில் பொது மக்கள் தங்களின்
கோரிக்கைகள், கருத்துக்களை தன்னுடைய தொலைபேசி இலக்கமான +94 (77) 386 8579
என்ற இலக்கத்திற்கு அல்லது குறித்த இலக்கத்தின் வட்ஸ்,வைபர்,டெலிகிராம்,
சிக்னல் மூலம் தொடர்புகொள்ளவோ, அல்லது தகவல்களை அனுப்பவோ முடியும் என
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்
மருத்துவுர் திலிப் லியனகே தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கான சிறந்த சேவையினை வழங்கும் பொருட்டும், மேற்படி
நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளதாகவும், பொது மக்க்ள தமிழ், சிங்களம்,
ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறுந் தகவல் அல்லது அழைப்பினை ஏற்படுத்தி
கருத்து்ககளை தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பனையின் செய்தி குறிப்பின் மூலம்
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்
மருத்துவுர் திலிப் லியனகே இதனை தெரிவித்துள்ளார்.