தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு தரப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியில் நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின்போது உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
மேலும், யுத்தம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டது எனவும் அந்த யுத்தத்தில் நாம் வெற்றி கொண்டோம்.
இருப்பினும், தற்போது நம்நாட்டில் சமாதானத்தை கொண்டு வரவேண்டும் அதைத்தான் நாம் இப்போது முன்னெடுத்து வருகிறோம் என்றும் சுட்டிக்காடினார்.
தமிழ் மக்களுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதி தீர்வு ஏற்படும் என நான் நம்புகிறேன் அதற்காக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்றாலும் எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தற்போது எதிர்கொண்டுள்ள பயங்கரவாதமும் முன் எதிர்கொண்ட பயங்கரவாதத்தை போன்ற இல்லை நாம் அவ்வாறான பயங்கரவாதத்தை மீண்டும் எதிர் கொள்ள மாட்டோம் என்று நம்புகின்றேன்.
என்றாலும் அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக இருந்தாலும் நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.