
கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் இளம் குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் சற்று முன்னர் வல்வெட்டித்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வல்வெட்டிப் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கிருஷாந்தன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் சகோதரியின் கணவரால் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.