ஸ்மார்ட்போனை அப்டேட் செய்வதால் பல்வேறு மென்பொருள் பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அடுத்த 2 மாதத்திற்கு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனை அப்டேட் செய்ய வேண்டாம் என அவரச அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.
ரெட்மி, கூகுள் பிக்சல் என பலதரப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தங்களது பயனர்களுக்காக பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வருகின்றன.
தனிப்பயனாக்கப்பட்ட அப்டேட்டுகள், கமரா தெளிவுதிறன், ஸ்மார்ட்போனின் செயல்திறன் போன்றவை இந்த அப்டேட் மூலம் மேம்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல ஸ்மார்ட்போன்களில், அப்டேட்டுக்குப் பிறகு பல்வேறு குறைபாடுகள் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன.