
எதிர்காலத்தில் எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய உயர் மின் கட்டணத்தில் இருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றால் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த தகவலை வெளியிட்டார்.
அதிகரித்த மின்சாரக் கட்டணம் தொடர்பில் நாடு முழுவதிலும் இருந்து குற்றச்சாட்டுகள் மற்றும் குறைகள் கேட்கப்படுவது தொடர்பில் ஜனக ரத்நாயக்கவிடம் கேள்வி எழுப்பும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், மின்கட்டண உயர்வைக் குறை கூறாமல் முடிந்தவரை மின்கட்டணம் செலுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.