
நீதிக்கும் சமாதானத்திற்க்குமான கனேடியர்கள் அமைப்பினால் வடக்கு மீனவர்கள் பாதிப்புக்கள் தொடர்பில் நேற்றையதினம் பிற்பகல் 6:00 மணியிலிருந்து இரவு 9:00 மணிவரை ஆராயப்பட்டு மீனவர்களையும், கடல் வழங்களையும் அழிக்கின்ற அடிமடி தொழில் போன்ற சட்ட விரோத தொழில்களை கட்டுப்படுத்தும் சட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் அதற்க்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்க்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.



நீதிக்கும் சமாதானத்திற்க்குமான கனேடியர்கள் அமைப்பின் குறித்த செயற்றிட்டத்தின் சட்டத்தரணி நாகானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று வடக்கு மாகாண கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே சட்டத்தரணி நாகானந்தா இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் பொருளியல் ஆய்வாளர், செல்வின் வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் கா.அண்ணாமலை, மற்றும் நிர்வாகிகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் மீனவர் பிரதிநிதிகள், என சுமார் சுமார் முப்பது பேர் வரை கலந்து கொண்டனர்.