
வடமராட்சி மந்திகை குரும்பைகட்டி சனசமூக நிலையத்தின் 77 வது ஆண்டுவிழா சிறப்பாக இடம் பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் அதன் தலைவர் தில்லைநாதன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதன் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு சிறார்களின் பாண்ட் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது.



மங்கல விளக்குகளை நிகழ்வின் பிரதம விருந்தினரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான சிவநாதன், திருமதி சிவநாதன், கௌரவ விருந்தினரான மூத்த ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதன், மற்றும் விருந்தினர்கள் ஏற்றிவைத்தனர்.




தொடர்ந்து தேசியக் கொடியினை பேராசிரியர் சிவநாதன் ஏற்றயதை தொடர்ந்து குரும்பகட்டி சனசமூக நிலைய கொடியினை நிலைய தலைவர் ஓய்வு பெற்ற முன்பள்ளிக் கல்வி உதவி பணிப்பாளர் தில்லைநாதன் ஏற்றியதை தொடர்ந்து ஆசியுரை இடம் பெற்றது.


தொடர்ந்து நிகழ்வின் பிரதம விருந்தினர் சம்பிர்தாய பூர்வமாக நிக்வை ஆரம்பித்து வைத்ததை தொடர்ந்து இரண்டு இல்லங்களாக பிரித்து விளையாட்டுக்கள் இடம் பெற்றது. இதில் வெற்றியீட்டிய வீரர்களுக்கு பரிசில்கள், சான்றிதழ்கள், பதக்கங்களை நிகழ்வின் பிரதம விருந்தினர் பேராசிரியர் சிவநாதன், சிறப்பு விருந்தினர் பருத்தித்துறை பொலீஸ் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க, கௌரவ விருந்தினர் மூத்த ஊடகவியலாளர் சி.தில்லைநாதன் உட்பட பலரும் வழங்கி வைத்ததுடன் கருத்துரைகளையும் நிகழ்த்தினர்.
இதில் கிராம மக்கள், அயல் கிராம மக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.




