
கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் இளம் குடுமபஸ்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர் ஒருவர் 11மாதங்களின் பின்னர் பொலிசாரால் நேற்று (18-09-2022) கைது செய்யப்பட்டுள்ளார்.


கிளிநொச்சி பொலிஸ் பிரிவிலுள்ள பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் 27 வயதுடைய முத்தையா கேதீஸ்வரன் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே கடந்த நவம்பர் மாதம் 16ம் திகதி இரவு இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்
நவம்பர் மாதம் 17ம் திகதி சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியம், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, ஆகியோர் முன் நிலையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டதையடுத்து உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்துடன்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 11மாதங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை நேற்றைய தினம் விசேட குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளதுடன் குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தவுள்ளதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 11மாதங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை நேற்றைய தினம் விசேட குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளதுடன் குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தவுள்ளதகவும்