
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளும் இன்று காலை யாழ் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியத்தினரால் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவாலயத்தில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
இதன் பொழுது தியாக தீபம் திலீபனின் நினைவு ப்படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி ஒரு நிமிட அகவணக்கமும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது






