நாட்டில் தற்போதைய நாட்களில் போதிய மழையில்லாத காரணத்தினால் நீர் இருப்பு படிப்படியாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி 85 சதவீதமாக இருந்த தண்ணீர் கையிருப்பு தற்போது 80 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக போதிய மழை பெய்ததன் காரணமாக கிட்டத்தட்ட 80 சதவீத மின்சார உற்பத்தி நீரால் செய்யப்பட்டதாக பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், தற்போது தண்ணீரும் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நீர் இருப்பு இன்னும் குறையும் அபாயம் உள்ளதால், தற்போதுள்ள இருப்புகளை பாதுகாக்க வேண்டியது அவசியம், எனவே இந்த நேரத்தில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள், நிலக்கரியை விரைவில் வழங்குவது அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.