
கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு கோரிய 100 நாள் செயலமர்வின் 50 ம் நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
நிரந்தரமான அரசியல் தீர்வை வலுயுறுத்தி இடம்பெற்று வரும் நூறு நாள் செயற்திட்டத்தில் 50வது நாளான இன்றையதினம் கிளிநொச்சி இரணைமடு குளம் அமைந்துள்ள பகுதியில் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.



இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடன் நிறுத்து, கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள்குரல், இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து 50ம் நாளான இன்று பட்டம் விட்டு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களிற்க கருத்து தெரிவித்தனர்.