புத்தளம்- எலுவாங்குளம் தவுசமடு பகுதியில் பாரிய சவாலுக்கு மத்தியில் விவசாயத்தை மேற்கொண்டதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இம்முறை 600 ஏக்கர் பரப்பில் சிறுபோகம் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் ஒரு ஏக்கருக்கான விதை நெல் 8000 ரூபாவிற்கும் ஒரு ஏக்கருக்கான உரம் மூடை 8000 ரூபாவிலிருந்து 40000 ரூபா வரை உரத்தை கொள்வனவு செய்ததாகவும் தற்பொழுது அறுவடைக் கூழி ஒரு ஏக்கருக்கு சுமார் 23,000 ரூபா வரை செலவாகின்றதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த பெரும்போகத்தைவிட இந்த முறை சிறுபோக நெற்பயிர்ச் செய்கை மிகவும் குறைந்தளவிலான விளைச்சலே தமக்கு கிடைக்கெப்பெற்றுள்ளதாகவும் இதனால் தமக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
இதனை ஈடுசெய்வதற்கு அரசாங்கம் தமது நெல்லை 120 ரூபா முதல் 130 ரூபாவரை கொள்வனவு செய்வதாக தெரிவித்தும் தாம் 102, ரூபா முதல் 105. ரூபாவரை தமது நெல்லை வழங்குவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அரசாங்கம் கூறியது போன்று தமது நெல்லை 130 ரூபாவிற்கு பெற்றுக்கொள்வதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.