தமிழக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வடபகுதியைச் சேர்ந்த அனைத்து இளைஞர்களையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 69 தமிழ் இளைஞர்களின் உறவினர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கடற்றொழிலை தொடர முடியாமல் வெளிநாடு செல்ல முயற்சித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக வேறு நாட்டிற்கு செல்ல முயற்சிப்பதை மன்னிப்பதில்லை என தெரிவித்த அமைச்சர், சம்பந்தப்பட்ட இளைஞர்களை அவர்களது உறவுகளை பயன்படுத்தி விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.