ரஷ்ய இராணுவத்தின் பிடியில் இருந்து உக்ரைன் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட ஏழு இலங்கையருக்கும் நாடு திரும்ப விருப்பமில்லை என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அழைத்துச் செல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஏழு பேரும் மருத்துவ மாணவர்கள் அல்ல என தெரிவித்த அமைச்சர், இவர்கள் ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த குழுவினர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் உள்ள வேறொரு நாட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் உக்ரைனில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்த போது இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உக்ரைன்-ரஷ்யா மோதல்கள் ஆரம்பமான போது, இலங்கைக்கு வரத் தயாராக இருந்த இலங்கையர்கள் அனைவரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக அவர் கூறினார்.