திலீபனின் நினைவிடத்தில் அரசியல்வாதிகளின் அரசியல் செய்யக்கூடாது என முதலாவது நினைவு வாரத்தில் மல்லுக்கட்டிய கயோந்திரர்கள் அணி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதே இடத்தில் ஊடக சந்திப்பை நடத்தியது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயற்பாட்டாளான பொன் மாஸ்ரர் குறித்த ஊடக சந்திப்பை நடத்தியிருந்தார்.
கடந்த 15 ஆம் தேதி திலீபனின் முதலாவது நினைவு வாரத்தில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்கள் கருத்துக்களை கேட்க முற்பட்டபோது புனிதமான இடத்தில் புனிதமான நாளில் கட்சி அரசியல் யாரும் செய்யக்கூடாது என கயேந்திரர்களின் சில எடுபிடிகள் ஊடகவியலாளர்களுக்கு வகுப்பெடுத்தனர்.
ஆனால் அதே அணி நேற்று (20/09/2022) செவ்வாய்க்கிழமை திலீபனின் நினைவிடத்தில் ஊடக சந்திப்பில் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், மற்றும் முன்னாள் போராளிகள் தொடர்பில் காட்டமான கருத்தை நினைவிடத்திற்கு முன்னால் கூறியிருந்தார்
அண்மையில் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் இடம் பெற்ற சிறைக்கைகளின் உறவினர்களின் போராட்டத்திற்கு குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு எவ்வித பங்களிப்பையும் செய்யவில்லை.
தாமே படுக்கை வசதிகள் உணவுகள் வாங்கி கொடுத்தது நாங்கள் தான் எனக் கூறியதுடன் குறித்த விடையம் ஒரு ஊடகவியலாளர்க்கும் தெரியும் என அவரின் பெயரை குறிப்பிட்டு கூறினார்.
அதுமட்டுமல்லாது திலீபனின் கோரிக்கையை இந்தியா ஏற்காது போனதால் அவர் உண்ணாவிரதம் இருக்க நேரிட்டதுடன் யாழ் மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் திலீபனின் கட்டமைப்புக்காக உருவாக்கப்பட்ட குழு முதலில் எமது பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதை விட்டு ஏனையவர்களை ஒரே வழியில் செயற்படுத்த அழைப்பு விடுமாறும் கூறினார்.
மேலும் தெரிவிக்கையில் ஆறு வருடங்களுக்கு முன்பு திலீபன் நினைவு கட்டமைப்பை நாங்கள் தான் உருவாக்கினோம். எக்காலத்திலும் எந்த தடை வந்தாலும் தொடர்ச்சியாக நினைவு கூர்ந்து வருகின்றோம் .
யாழ் மாநகர முதல்வர் தனது உத்தியோகபூர்வ தாளில் நினைவேந்தல் கட்டமைப்புக்கு அழைப்பு விடுவது ஏதோ ஒரு பின்னணியை உருவாக்க நினைப்பதுடன் தமிழ் தேசிய நீக்கத்தை செய்ய முனைவதாக குற்றச்சாட்டினார்.
குருந்தூர் மலையில் பிரச்சனை இடம் பெற்று வருகிற நிலையில் திலீபனுக்காக அமைக்கப்பட்ட 15 பேர் கொண்ட நினைவேந்தல் கட்டமைப்பு அங்கு சென்று போராட்டத்தை நடத்துமாறு கோரினார்.