இலங்கையில் நிலவும் உணவுப்பாதுகாப்பின்மை காரணமாக சில குடும்பங்கள் உணவை கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.
இலங்கையில் உணவுப்பாதுகாப்பு நிலைமை ஸ்திரமற்றதாகவே இருப்பதாக, ஐக்கிய நாடுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தின் வீட்டு உணவுப்பாதுகாப்பு ஆய்வுகளின்படி, மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இப்போது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.
இது ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது அதிகரிப்பு ஆகும். 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியுடன் தொடர்ந்து போராடி வருகிறது.
வரலாறு காணாத உயர் விலை அதிகரிப்பதால், உணவுப் பாதுகாப்பு ஆபத்தானதாகவே உள்ளது. உணவுப் பாதுகாப்பு ஆய்வுகளின்படி, மூன்றில் ஒரு பங்கு மக்கள் (37 சதவீதம்) இப்போது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.
பத்தில் எட்டு குடும்பங்கள் உணவை தியாகம் செய்தல், உணவை கடன் வாங்குதல் மற்றும் உண்ணும் உணவின் எண்ணிக்கையை குறைத்தல் போன்ற உணவு அடிப்படையிலான சமாளிப்பு உத்திகளுக்கு தொடர்ந்து மாறி வருகின்றன.
நெருக்கடியானது சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் சமமற்ற தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இது பலவிதமான பிளவுகளை ஏற்படுத்தும். ஆண் தலைமைத்துவ குடும்பங்களை விட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மோசமாக உள்ளன.
அதே நேரத்தில் பெருந்தோட்டம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் கிராமப்புறங்களை விட மோசமாக உள்ளனர்.கல்வி நிலைகளிலும் வருமான வழிகளிலும் இதே போன்ற ஏற்றத்தாழ்வுகளைக் காணலாம்.
உலக உணவுத் திட்டம், இதுவரை 60,000க்கும் அதிகமான மக்களை நிதி உதவி மற்றும் வவுச்சர் உதவிகளை வழங்கியுள்ளது.