![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/09/22-632a5d7ea6ea9.jpg)
இந்த நாட்டில் போசாக்கின்மையை குறைத்து மூன்று வேளை உணவு வழங்க வேண்டுமாயின் மதுபானசாலைகளை மூட வேண்டும் அல்லது மதுபானத்தின் விலையை குறைக்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பகல் முழுவதும் உழைக்கும் மக்கள் மாலையில் சிறிதளவு மதுபானம் அருந்துவது வழக்கமாகிவிட்டதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டுகிறார்.
மதுவின் விலை உயர்வால் மது அருந்திவிட்டு வீடுகளுக்கு கொண்டு செல்ல பணம் இல்லை எனவும் இதனால் குடும்பத்திற்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே மதுவின் விலையை குறைத்தால் வீட்டிற்கு கொண்டு செல்ல பணம் மீதமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.