
கிளிநொச்சியில் கொரோனாப் பரவல் தீவிரம் பெற்றுள்ள நிலையில் கிளிநொச்சி சேவைச் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பொருத்தமான பொது இடங்களில் வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது.
வியாபாரிகளும் மக்களும் சுகாதார நடைமுறைகைகளை உரிய வகையில் பின்பற்றி நடந்துகொள்ளுமாறும் பிரதேச சபை அறிவுறுத்தியுள்ளது.