(வடமராட்சி கிழக்கு சிந்தனை செல்வன்)
வடமராட்சி கிழக்கையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய நாளும், வடமராட்சி கிழக்கிலே நாகர்கோவில் மண்ணில் இடம்பெற்ற இரண்டாவது இனப்படுகொலையை விமானப்படையின் புக்காரா விமானங்கள் நடாத்தியதன் 27 வது நினைவு நாள் இன்றாகும்.
அன்றைய நாட்களில் வடமராட்சி கிழக்கில் இடம் பெயர்ந்த மக்கள் நாகர்கோவில் கிராமத்தின் J423 J424 J425 ஆகிய கிராமங்களிலே ஏறக்குறைய 5000க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர்.
1990 ம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, திருகோணமலை, வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனையிறவு, தட்டுவன்கொட்டி, யாழ்ப்பாணத்தின் வலிவடக்கு மயிலிட்டி, காங்கேசன்துறை, பலாலி, வாசாவிளான், வளலாய் பொன்ற பகுதிகளில் இருந்து இடம்பெயந்தமக்களும், 1990 ஆம் ஆண்டு தீவகத்தை ராணுவம் கைப்பற்றிய போது அங்கிருந்த தப்பி வந்த மக்களும், 1991.07.14 காலப்பகுதியில் ஆனையிறவு மீட்ப்பதற்க்காக வடமராட்சி கிழக்கில் வெற்றிலைக்கேணியில் ராணுவம் தரையிறங்கியபோது வெற்றிலைக்கேணி, ஆழியவளை உடுத்துறை, வத்திராயன், மருதங்கேணி போன்ற கிராமசேவகர் பிரிவுகளில் இருந்தும் இடம்பெயர்ந்த மக்களும், 1992 ல் மாதகல், இளவாலை, பண்டத்தரிப்பு, சுழிபுரம், பொன்னாலை, மூளாய், சேந்தாங்குளம், பகுதிகளைசேர்ந்த மக்களும் குறிப்பாக கடற்றொழிலை தமது வாழ்வாதரமாகக் கொண்டமக்கள் அங்கு இடம் பெயர்ந்து வசித்து வந்தனர்.
குறித்த இடம் பெயரதந்து வசித்துவந்த மக்களுக்கு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவர்கள் குடியிருப்பதற்க்காக தறதகாலிக ஓலை குடிசைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு முகாம், திருகோணமலை முகாம், ஆனையிறவு முகாம், தட்டுவன்கொட்டி முகாம்,
பலாலி முகாம் , காங்கேசன்துறை முகாம், வெற்றிலைக்கேணி முகாம்
ஆழியவளை முகாம்
மாதகல் முகாம், இளவாலை முகாம்
எனும்பெயர்களில் இருந்து வந்தன.
பலாலி முகாம் , காங்கேசன்துறை முகாம், வெற்றிலைக்கேணி முகாம்
ஆழியவளை முகாம்
மாதகல் முகாம், இளவாலை முகாம்
எனும்பெயர்களில் இருந்து வந்தன.
இவ்வாறு இடம் பெயர்ந்து வசித்துவந்த மாணவர்களும், நாகர்கோவில் மாகா வித்தியாலயம், நாகர்கோவில் தெற்க்கு ஆரம்ப பாடசாலையிலை கல்வியை தொடர்ந்தார்கள்.
சுமார் 250 மாணவர்கள் கல்வி கற்று வந்த நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் சுமார் 2500 க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் அப்போது கல்விகற்றார்கள்.
அந்த.நாட்களில் நாகர்கோவில் கிராமம் ஒரு மாநகரம் போல் மக்கள் காட்சியளித்தது. அங்கு சந்தையொன்றும் இயங்கியது. அந்த மக்களுக்காக அப்போது வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் 3 கிளை நிலையங்கள் ஊடாக தமது சேவையை வழங்கியிருந்தன.
20.09.1995.அன்று முல்லைத்திவு. செம்மலைக்கடற் பரபில் விடுதலைப்புலிகளுக்கும் கடற் படைக்கும் இடையில் இடம் பெற்ற மோதலில் ஐரிஸ் மோனா. எனும் படைகளுக்கு பொருட்களை கொண்டு செல்லும் கப்பலை கைப்பற்றியிருந்தார்கள்.
கைப்பற்றப்பட்ட அந்தக் கப்பலை தமது தளம் அமைந்திருந்த நாகர்கோவிலுக்கு கிழக்குப் பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடாரப்பு கடலில் நங்குரமிட்டிருந்தார்கள்.
அந்த கப்பலை இலக்குவைத்து புக்கார விமானங்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தது. விமானங்கள் மீதும் தாக்குதல்களை நடத்திக் கொண்டிந்தார்கள். இலக்கை அடையமுடியாத புக்காரவிமானம்கள் இரண்டும் நாகர்கோவில் கிராமத்தையும் சுற்றி வட்டமிட்டது
புக்கார வட்டமிட்டபோது சந்தைக்கு சென்ற மக்கள், உலர் உணவு நிவாரணம் பெற்றுக் கொள்ள சென்ற மக்கள் என எல்லோரும் பாதுகாப்புதேடி ஓடினர்.பெதுகாப்பான பதுங்குளிகளிலும் பதுங்கிக் கொண்டனர். இதில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களும் பாதுகாப்பு தேடி ஓடினர்.
அப்போது புக்கார விமானங்கள் தாழப்பறந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பாதுகாப்பு தேடி ஓடிய பாடசாலை மாணவர்களில் ஒரு பகுதியினர் பாடசாலை ஓரமாகவிருந்த புளியமரத்தின் கீழ் பாதுகாப்புத்தேடிக்கொண்டனர். அவ்வேளையில்தான் அடுத்தடுத்து இரண்டு புக்கார விமானங்களும் ஆறுக்குமேற்பட்ட குண்டுகளை பாடசாலையை சுற்றிவீசியது.
இரண்டு குண்டுகள் பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பென பதுங்கியிருந்த அந்தப் புளிய மரத்தின்மீதும் வீசப்பட்டன. வீசப்பட்ட அந்தக் விமானக் குண்டுகள் வெடித்ததில் சம்பவ இடத்திலே.25 மாணவர்கள் கொல்லப்பட்டனர், 35 க்கு மேற்ப்பட்ட மாணவர்கள் படுகாயடைந்தனர்.
மாணவர்களின் வெள்ளை நிற சீருடைகள் குருதியினால் தோய்ந்து சிவப்பு நீறமாக மாறின. இதில் ஐந்து அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
இச் சம்பவத்தில் மயிலிட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது இரண்டு கால்களையும் இழந்தார். அவர் நாகர்கோவில் படுகொலையின் சாட்சியாக இன்றும் உள்ளார்.
காயமடைந்த மாணவர்களுக்கு விடுதலைப்புலிகளின் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
படுகாயமடைந்த பொதுமக்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம், புனர்வாழ்வுக்கழகம், விடுதலை புலிகள் பொதுமக்கள் அனைவருமாக அம்பன் வைத்தியசாலைக்கும், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
இப் படுகொலையின் சாட்சியாக இன்றும் பலர் உள்ளனர். பலர் சுனாமியிலும் இறுதியுத்தத்திலும் கொல்லப்பட்டுள்ளனர். அன்று அத் தாக்குதலில் காயமடைந்த ஒரு மாணவி இன்று ஆசிரிகையாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
வடமராட்சி கிழக்கை மட்டுமல்ல தமிழர்களையே சோகத்தில் ஆழ்த்திய அந்த நாகர்கோவில் படுகொலையின் 21 மாணவர்கள் கொல்லப்பட்டதன் 27 வது நினைவு நாள் இன்றாகும், அந்த. வலிகளையும் அப்போது கொல்லப்பட்ட மாணவர்களை மட்டும்ல்ல அப்பாவித்தனமாக படு கொலை செய்யப்பட்ட அனைவரையும் நினைவு கூரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும், இவைதான் எமது எதிர்கால சந்ததியினருக்கு எமது வரலாற்றை எடுத்துச் செல்லும்.