
சக்கோட்டை கடற்கரையில் இன்று அதிகாலை 5:30. மணியளவில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 551 படை பிரிவினரால் 42 கிலோகிராம் கஞ்சா பொதி ஒன்றினை கைப்பற்றியுள்ளனர்.




இன்று அதிகாலை சக்கோட்டை கடற்கரையில் படகில் இருந்து கஞ்சப் பொதியை இறக்கிக் கொண்டிருந்த போதே சுற்றுக் காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த படையினர் கஞ்சா பொதியை கைப்பற்றியுள்ளனர். இதே வேளை படையினர் வருவதை அவதானித்த கஞ்சா கடத்தல் காரர்கள் ஒரு பொதியை மட்டும் இறக்கிய நிலையில் மீண்டும் கடறிற்க்குள் படகு மற்றிம் கஞ்சாவுடன் தப்பி சென்றுள்ளனர்.
தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை மதுவரி திணைக்களத்தினூடாக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.