சத்துணவு வழங்களை நிறுத்த வேண்டாம் என கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. எனினும், புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியரிடம் பொறுப்புக்கள் பாரமளிக்கப்பட்டு கணக்காய்வின் பின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என திருச்சபை அறிவித்துள்ளது.
கிளிநொச்சி விசுவமடு பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்துணவு மற்றும் மாலை நேர கல்வி உள்ளிட்ட சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், குறித்த பணிக்கான புதிய ஊழியராக வணபிதா ஜோன் தேவசகாயம் கடந்த 18ம் திகதி தென்னிந்திய திருச்சபை பேராயத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், ஏற்கனவே பணியில் இருந்த வண எஸ்தர் மடுராணி பொன்ராசா, குறித்த பணித்தளத்தில் இருந்து வெளியேற மறுத்துள்ளதாகவும், அதானால் குறித்த திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாதுள்ளதாகவும் திருச்சபை கவலை தெரிவித்துள்ளது.
பணியில் இருந்த வண எஸ்தர் மடுராணி பொன்ராசாவின் வழிநடத்தலில் முன்னெடுக்கப்பட்ட குறித்த பணியின் போது, பெரும் தொகை பணம் காசோலை ஊடாக மாற்றப்பட்டு, சிறு சிறு செலவுகளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து செலவுகளுக்கும் காசோலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்ட போதிலும், அத்தகைய நடைமுறை பின்பற்றப்படவில்லை.
மேலும் குறித்த ஊழியதிற்கான, சேவைக்காலம் நிறைவடைந்து இடமாற்றம் அறிவிக்கப்பட்ட நிலையில், இடமாற்றத்தை மறுத்துள்ளார்.
இந்த நிலையில் புதிதாக பொறுப்புக்களை ஏற்ற ஊழியரிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கணக்காய்வுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனால், குறித்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து மிக விரைவில் குறித்த பணி முன்னெடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட குரு முதல்வர் வணபிதா கோணேஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜென்சன் தலைமையில் இடம்பெற்றது.
சத்துணவு திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருச்சபையினரின் கருத்தினடிப்படையில், புதிய ஊழியரிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பதன் ஊடக சமூக பணிகளிற்கு இடையூறின்றி முன்டுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.