
காங்கேசன்துறை சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் பிரிவு பொலீஸ் அதிகாரிகளால் 30 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 5 கொள்கலன்கள், மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பததும் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதுடன், சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


நீண்டகாலமாக பருத்தித்துறை பொலீசாருக்கு டிமிக்கி விட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே இன்று அதிகாலை காங்கேசன்துறை சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் பிரிவிலிருந்து வருகைதந்த இரகசிய பொலிசாரால் கசிப்பு வடிப்பதற்க்கு பயன்படுத்திய 5. கொள்கலன்களும், முப்பது லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டதுடன், சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட கசிப்பு உற்பத்தி பொருட்களையும் பருத்தித்துறை பொலீசார் ஊடாக நாளை நீதிமன்றில் முற்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பருத்தித்துறை பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.