
நாகர்கோவில் விமானப் படையினரின் குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்களின் 27 நினைவேந்தல் 22/09/2022 அன்றைய தினம் மதியம் 12:05 மணிக்கு அதன் ஏற்பாட்டுக்குழு தலைவர் திரு.சிவாயநம தலமையில் நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் இடம் பெற்றது.
1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அன்று விமான படையினரின் புக்காரா விமானம் வீசிய குண்டு தாக்குதலில் நாகர்கோவில் மகாவித்தியத்தின் 21 மாணவர்கள் பலியாகினர்.
அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வே இடம் பெற்றுள்ளது.
முன்பதாக முற்பகல் 11மணியளவில் ஆலயத்தில் ஆத்மா சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நண்பகல் 12:05 மணியளவில் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக, இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த சுந்தரலிங்கம் பொது ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சுடர்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், உறவுகள் சுடர் ஏற்றியதுடன் மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் 21 மாணவர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு படுகொலைக்கு உள்ளான மாணவர்களது பெற்றோர்கள், உறவுகள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் நினைவுரைகளை குறித்த படுகொலை செய்யப்பட்ட காலப்பகுதியில் பாடசாலை முதல்வராக இருந்த திரு.மகேந்திரன், மற்றும் தற்போதைய அதிபர் கண்ணதாசன் ஆகியோர் நினவுரை ஆற்றினர்.
இந்நினை வேந்தலில் பாடசாலை அதிபர், ஒரு சில ஆசிரியர்கள், மற்றும் கொல்லப்பட்ட மாணவர்களின் உறவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.