
மனைவியுடன் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற போது, சாரதியான கணவனின் உடலில் தேரை பாய்ந்ததில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் சாரதி உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்தனகல்ல மீகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த அபேகோன் முடியன்சேயை வசிப்பிடமாகக் கொண்ட ஜயந்த பத்மகுமார (வயது 58) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நிட்டம்புவ கிரிதிவெல பிரதான வீதியின் தியகொடெல்ல பிரதேசத்தில் கடந்த (21) ஆம் திகதி பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவித்தவேளை முச்சக்கரவண்டியின் பின்னால் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கிரிதிவெல காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல் பரிசோதகர் மிலந்த சில்வா, பிரதி பொலிஸ் பரிசோதகர் சுதேஷ், போக்குவரத்துப் பிரிவின் நிலைய கட்டளைத் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.