நபரொருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியமை, படுகொலை, துப்பாக்கிப் பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நபரொருவரை கம்பஹா ராகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, ராகம கிம்புலாஎல பிரதேசத்திலுள்ள பாலடைந்த வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த 200 ஆம் ஆண்டு மாபாகே பிரதேசத்தில் வைத்து நபரொருவரை கத்தியால் குத்தி காயப்படுத்திய குற்றத்துக்காக பொலிஸாரார் தேடப்பட்டு வந்துள்ளார்.
அதேபோன்று 2015, 2017ஆம் ஆண்டுகளில், மினுவாங்கொட, எல்லிட்டிய ஆகிய பிரதேசங்களில் இருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தமை தொடர்பிலும் குறித்த நபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று 2020ஆம் ஆண்டு மாபாகே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகுல்பொக்குன பிரதேசத்தில் நபரொருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியமை, 2015ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை ஆகிய குற்றங்கள் தொடர்பிலும் குறித்த நபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.