துருக்கி நாட்டைச் சேர்ந்த கலைஞரான ஆல்பர் யெசில்டாஸ் என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கற்பனை விடயங்களுக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதன்படி மறைந்த இளவரசி டயானா மற்றும் பொப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோர் இன்று உயிருடன் இருந்திருந்தால் எப்படி இருப்பார்கள் என தனது கற்பனையை இந்த தொழில்நுட்பம் மூலம் ஓவியமாக வெளிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய குறித்த ஓவியத்தில் மைக்கேல் ஜாக்சன் கருப்பு, வெள்ளை நிறத்தில், தலை நிறைய முடியுடன், தோல் சுருக்கங்களுடன், உடலில் வயது முதிர்வுக்கான அடையாளங்களுடன் சிரித்தபடி காணப்படுவது போன்றும், இளவரசி டயானா, அதே மெலிந்த தேகம் மற்றும் வெண்ணிற தலைமுடியுடன் சற்று வயது முதிர்வுக்கான தோல் சுருக்கங்களுடன் காணப்படுவது போன்றும் உருவாக்கப்பட்டுள்ளனர்.