விசேட நிபுணர்களின் ஆலோசனைகளை பொருட்படுத்தாது தான் தோன்றித்தனமாக செயற்படுவதால் முழு நாடும் இன்று அபாய நிலையில் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஆட்சியாளர்கள் இதயம் கொண்டவர்களாக செயற்பட வேண்டும்.
அன்று நான் கூறியதை கேலி செய்த அரசாங்கத்திற்கு இன்று அவை மரணங்களாக மாறியுள்ளதை சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கஸ்ட காலத்தில் தங்களை அர்ப்பணித்துள்ள அரச ஊழியர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரை விசேடமாக வாழ்த்துவதாகவும் அவர்களின் அர்ப்பணிப்புக்கு பெருமதி சேர்க்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் கடன் முகாமைத்துவம் அவசியம் என்றும் இல்லையேல் நாடு சிக்கலை நோக்கி செல்லும் எனவும் கூறிய சஜித் பிரேமதாஸ, அவ்வாறான நிலை ஏற்பட வாய்ப்பளிக்க வேண்டாம் எனவும் அதனை செய்து ஆட்சியை பிடிக்கும் நோக்கம் தனக்கு இல்லை எனவும் அரசியலுக்கு முன் நாட்டின் பாதுகாப்பு முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்