ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து கிழக்கே 600 மைல் தொலைவில் இஷெவ்ஸ்க் நகரம் உள்ளது. 6,00,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்த நகரத்தின் பாடசாலை ஒன்றில் இன்று (26) பயங்கர துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் ஐந்து குழந்தைகள் உட்பட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு பாதுகாவலர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருப்பதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த தாக்குதலில் 20 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும், துப்பாக்கிதாரியின் உடல் சம்பவ இடத்தில் இருந்து காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் இதுவரை தெளிவாகத் தெரிய வராத நிலையில், உட்முர்டியா பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் ப்ரெச்சலோவ் தெரிவித்துள்ளார்.
சமீப வருடங்களில் ரஷ்யாவின் பல பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
கடந்த மே 2021 இல், கசான் நகரில் டீனேஜ் துப்பாக்கிதாரி ஒருவர் ஏழு குழந்தைகளையும் இரண்டு பெரியவர்களையும் கொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது