
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யப்பான் தலைநகர் டோக்யோ நகரை நேற்று சென்றடைந்துள்ளார்.
துப்பாக்கிதாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடந்த ஜூலை 8 ஆம் திகதி கொல்லப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
அவர் நேற்று (26) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி பிலிப்பைன்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
எவ்வாறாயினும், பிலிப்பைன்ஸ் செல்வதற்கு முன்னதாக ஜப்பானிய பிரதமர் மற்றும் பல அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.