நாடு முழுவதும் சுமார் இரண்டாயிரம் வெதுப்பகங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மா, முட்டை ஆகிய மூலப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாக அந்த தொழிலை நம்பி வாழ்ந்த லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெதுப்பக தொழிலுக்கு தேவையான மூலப் பொருட்களை விநியோகிக்கும் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் என்.கே. ஜயவர்தன கூறியுள்ளார்.
தற்போது மிகப் பெரியளவில் நடத்தப்படும் வெதுப்பகங்களில் சிறிய எண்ணிக்கையிலான வெதுப்பகங்களே இயங்கி வருகிறன. கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் பெரிய வெதுப்பகங்களுக்கு மாத்திரம் கோதுமை மாவை விநியோகித்து வருவதால், கஷ்டங்களுக்கு மத்தியிலும் அவை இயங்கி வருகின்றன எனவும் என்.கே. ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கோதுமை மா பிரச்சினை காரணமாக பாண் உட்பட வெதுப்பாக உணவுகளின் விலை அதிகரித்துள்ளதால், சிற்று்ண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்களை நடத்தி செல்ல முயாது பெரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.