இந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.
தங்கத்திற்கான உலகளாவிய தேவை விரைவாகக் குறைந்து வருகிறது. தொழிற்துறை மற்றும் நகைகளுக்கான பாரம்பரிய தேவை தொடர்ந்து சரிந்து வருவதைக் காண முடிகிறது.
குறிப்பாக தங்கத்தினை அதிகளவில் பயன்படுத்தும் சீனாவில் தேவை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்க விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.
புவி அரசியல் பிரச்சினை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம்
24 கரட் – 1 கிராம் – ரூபாய் 20,910.00
24 கரட் – 8 கிராம் (1பவுன் ) – ரூபாய் 167,300.00
22 கரட் – 1 கிராம் – ரூபாய் 19,170.00
22 கரட் – 8 கிராம் (1 பவுன்) – ரூபாய் 153,350.00
21 கரட் – 1 கிராம் – ரூபாய் 18,300.00
21 கரட் – 8 கிராம் (1 பவுன்) – ரூபாய் 146,400.00