நாட்டில் இன்று மின்வெட்டு நேரத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், மின்வெட்டு நேரமானது 03 மணிநேரமாக நீடிக்கப்படவுள்ளது.
தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு மின்வெட்டு காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், நாளை முதல் 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சப்புஸ்கந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 03 ஆவது மின் உற்பத்தி இயந்திரமே இவ்வாறு செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மின்வெட்டு காலம் நீடிக்கப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, மின்வெட்டு காலத்தை நீடிப்பது தொடர்பான அறிவிப்பு எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.