திருகோணமலை கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ்நாடு இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் திருகோணமலை திருக்கோணேஸ்வரம் உலகெங்கும் வாழும் 120 கோடி இந்துக்களின் வழிபாட்டிடம் என்றும் அதனை ஆக்கிரமிப்பதை நிறுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார் அதன் முழு விபரம் வருமாறு.
திருகோணமலை 120 கோடி இந்துக்களின் வழிபாட்டிடம்!
தமிழ்த்திரு அர்ஜுன் சம்பத் நிறுவனத் தலைவர் இந்து மக்கள் கட்சி தமிழ்நாடு சார்பாக சமர்ப்பிக்கப்படும் கோரிக்கை புகார் மனு மற்றும் அறிக்கை
இராவணன் காலத்துக்கு முந்தைய 10,000 ஆண்டுகளுக்கும் கூடுதலாகப் பழமையான திருகோணமலைச் சிவன் கோயிலை முதல் முதலாக 400 ஆண்டுகளுக்கு முன்னர் இடித்தனர் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள்
இராமனுக்கு அயோத்தி! இராவணனுக்குத் திருகோணமலை! என்று 120 கோடி இந்துக்கள் உலகெங்கும் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையே அவர்களின் வாழ்வியல்.
அந்நிய ஆக்கிரமிப்பாளர் அயோத்தியில் மசூதியைக் கட்டினர். 120 கோடி இந்துக்களுமாக அதை அகற்றினார்கள். தற்போது அங்கே இராமருக்குக் கோயில் கட்டுகிறார்கள்.
ஆக்கிரமிப்பாளராக புத்த சமயத்தவர் திருகோணமலையில் புத்தர் சிலைகளை நிறுவிச் சிவன் கோயிலை அழிக்க முயன்றால், புத்தர்களைக் குடியேற்றி இந்துக்களின் நம்பிக்கை வாழ்வியலைச் சிதைக்க முயன்றால், பாபர் மசூதிக்கு அயோத்தியில் என்ன நடந்ததோ, திருகோணமலையில் புத்தர் சிலைகளுக்கும் புத்தருக்கும் நடக்கும்.
120 கோடி இந்துக்கள் சார்பில் புத்த சமய இனவாத வெறியர்களை எச்சரிக்கிறேன். இலங்கையில் திரிகோணமலை திருக்கோயில் மற்றும் திரிகோணமலை மாவட்டம் அதன் பூர்வ குடிகள் இந்து தமிழர்கள் சைவர்கள் ஆவார்கள்.
இலங்கை அரசாங்கம் சிங்கள பௌத்த மத வெறி கண்ணோட்டத்தோடு இந்து தமிழர்களின் அடையாளமாக திகழும் சிவன் கோயிலை ஆக்கிரமிக்க முயற்சிப்பதும் இராவணன் வெட்டு என்பதனை புத்த தடயமாக மாற்ற முயற்சிப்பதும் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் புத்தர் சிலையை வைத்து ஆக்கிரமிக்க முயற்சிப்பதும் திருகோன மலை பகுதியில் உள்ள இந்து தமிழர்களின் அடையாளங்களை அழிக்க முயற்சிப்பதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இது குறித்து இந்திய அரசாங்கமும் இலங்கை அரசிடம் எச்சரிக்க வேண்டும். சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடமும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் புகார் செய்யப்படும்.
திரிகோணமலை சிவன் கோயில் மற்றும் திருகோண மலையில் வசிக்கும் பூர்வகுடி இந்து தமிழர்களை காப்பாற்றிட சர்வ தேச சமூகமும் உலகெங்கிலும் இருக்கக்கூடிய 120 கோடி ஹிந்துக்களும் ஒன்றுபட்டு செயல்படுவோம். என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம் என்றுள்ளது.