
பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தினரினால் அமைக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை(27) முற்பகல் உடுத்துறையில் இடம்பெற்றது.


கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான. விஸ்.நடராஜாவின் 2 மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பில் அமைககப்பட்ட வீடு உடுத்துறையைச் சேர்ந்த பெண் தலமைத்துவத்தை கொண்ட விஜயகாந்தன் வசந்தகுமாரி என்பவருக்கே கையளிக்கப்பட்டது.
55 ஆவது காலால்படையினர் மற்றும் 53 ஆவது காலால்படையினரின் தளபதிகளின் நெறிப்படுத்தலில் 12 ஆவது விஜயபாகு காலால் படையினரின் ஒத்துழைப்புடன் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.
இந்த வீட்டினை யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தண விஜயசுந்தர உரிமையாளரிடம் கையளித்தார்.