
வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் எனக் கோரிய போராட்டம் மன்னர் மாவட்டத்தில் ஆரம்பமாகி நேற்று 58ஆவது நாளான கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேச செயலர் பிரிவின் இயக்கச்சியில் இடம்பெற்றுள்ளது.




வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான தீர்வு வேண்டும் என வலியுறுத்தி குறித்த அமைதி போராட்டம் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினர் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் பளைப்பகுதியில் உள்ள மக்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது
கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் தொடர்ந்து அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.