ராமேஸ்வரம் செப் 27,
இலங்கையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவர் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தனுஷ்கோடி வழியாக தமிழகத்துக்கு அகதிகளாக சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி ஒரு படகில் 2 குடும்பத்தை சேர்ந்த எட்டு நபர்கள் தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்று மணல் திட்டில் தவித்து வருவதாக இந்திய கடலோர காவல் படையினர் கிடைத்த தகவலையடுத்து ஹேவர்கிராப்ட் ரோந்து கப்பலில் மணல் திட்டிற்கு சென்ற இந்திய கடலோர காவல் படை வீரர்கள் இலங்கை தமிழர்களை பத்திரமாக மீட்டு மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு தப்பிச் சென்ற நபர் குறித்து இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில்; தமிழகம் சென்றுள்ள கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகுமார். இவர் கிளிநொச்சியில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையை உடைத்து நகை திரடியது, ஆள் கடத்தல், மற்றும் கொலை குற்றங்களில் நீதிமன்றத்தால் பிணையில் உள்ளவர் என்றும்,
அதே போல் யாழ்பாணம் மாவட்டத்தை சேர்ந்த கிருபாகரன் இவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்றும் இதனையடுத்து இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழக போலீசருக்கு தகவல் வழஙகியதை அடுத்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ள இருவரும் இலங்கையில் தேடப்படும் குற்றவாளிகள்.
இவர்களுக்கு இலங்கை நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளவர்கள் . எனவே அவர்களை முழு கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவித்திருந்த நிலையில் கடந்த வாரம் கிளிநொச்சி நீதிமன்றத்தின் வாயிலாக இந்திய அரசுக்கு இவர்கள் இருவரையும் சிறையில் அடைத்து வைக்கவும், விரைவில் இலங்கை போலீசார் தமிழக வந்து இருவரையும் கைது செய்து அழைத்துச் செல்லவார்கள் என் சுற்றிக்கை அனுப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த சந்திரகுமார் மற்றும், கிருபாகரன் ஆகிய இருவரையும் மண்டபம் போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இலங்கையில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் இருவர் அகதிகள் போர்வையில் தமிழகம் வந்து தங்கியிருந்து மண்டபம் அகதிகள் முகாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.